Advertisement

குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த சாம்சங் நிறுவனம்!

By: Monisha Sat, 05 Sept 2020 5:55:06 PM

குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த சாம்சங் நிறுவனம்!

சாம்சங் நிறுவனம் தனது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் குவாட் கேமரா சென்சார்கள், AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. தற்சமயம் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

எனினும், புதிய கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது கேலக்ஸி ஏ51 5ஜி மாடலை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் விலை ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

samsung,5g,smartphone,galaxy a42 ,சாம்சங் நிறுவனம்,5ஜி,ஸ்மார்ட்போன்,கேலக்ஸி ஏ42

அந்த வகையில் விலையை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஒன்பிளஸ் நார்டு மற்றும் ரியல்மி வி3 போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் எக்சைனோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர்
- 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

Tags :
|