Advertisement

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் இணையத்தில் வெளியாகியது!

By: Monisha Sat, 12 Dec 2020 5:58:02 PM

சாம்சங் நிறுவனத்தின் புதிய  ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் இணையத்தில் வெளியாகியது!

சாம்சங் கேலக்ஸி நிறுவனத்தின் புதிய ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிரவுசர் பென்ச்மார்க் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

தற்போதைய தகவல்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A526B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ52 ஜி என்றே அழைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது.

samsung,galaxy,smartphone,5g,display ,சாம்சங்,கேலக்ஸி,ஸ்மார்ட்போன்,5ஜி,டிஸ்ப்ளே

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|