Advertisement

5-வது வர்த்தக நாளான இன்று ஏற்றம் கண்ட சென்செக்ஸ்

By: vaithegi Fri, 27 Oct 2023 11:22:48 AM

5-வது வர்த்தக நாளான இன்று  ஏற்றம் கண்ட சென்செக்ஸ்


மும்பை: இந்த வாரத் தொடக்கம் முதல் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி கொண்டு வருகிறது. எனவே அதன்படி, மூன்று நாட்களாக சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது. இது நேற்று 900 புள்ளிகளாக மாறியது. அதே போல நிஃப்டி 260 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது.

பங்குச்சந்தையின் சரிவினால் நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாரத்தின் 5-வது வர்த்தக நாளான இன்று யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்து உள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

எனவே அதன்படி, ஐந்தாவது வர்த்தக நாளான இன்று 63,559 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 501.75 புள்ளிகள் உயர்ந்து 63,649.90 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 128.35 புள்ளிகள் அதிகரித்து 18,985.60 புள்ளிகளாக வர்த்தகமாகி கொண்டு வருகிறது.

sensex,trading day,stock markets ,சென்செக்ஸ்,வர்த்தக நாளான,பங்குச்சந்தைகள்

இதையடுத்து முந்தைய வர்த்தக நாளில் 63,774 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 900.91 புள்ளிகள் குறைந்து 63,148.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதோடு, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 264.90 புள்ளிகள் குறைந்து 18,857.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மேலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.10 டாலர் விலை உயர்ந்து 89.03 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 94.00 அல்லது 1.35% அதிகரித்து ரூ.7,039 ஆக விற்பனையாகிகொண்டு வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துவுள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. இதற்கு முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. மேலும் அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என 4 மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது

Tags :
|