Advertisement

இன்று சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்ந்தது

By: vaithegi Tue, 11 Apr 2023 11:17:46 AM

இன்று சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்ந்தது

இந்தியா: இன்றைய வர்த்தக நாளில் 60,028 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 377 புள்ளிகள் அல்லது 0.63% என உயர்ந்து 60,224 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 110.95 புள்ளிகள் அல்லது 0.63% உயர்ந்து 17,735 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,846 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,624 ஆகவும் நிறைவடைந்தது.

இதையடுத்து சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ் ஐடிசி லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

sensex,the stock market ,சென்செக்ஸ் ,பங்குச்சந்தை

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : கோடக் மஹிந்திரா வங்கி, ஐஷர் மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதானி எண்டர்பிரைசஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

மேலும் ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Tags :
|