Advertisement

சின்ன வெங்காயம் விலை திடிரென அதிகரிப்பு

By: vaithegi Wed, 11 Oct 2023 3:55:31 PM

சின்ன வெங்காயம் விலை திடிரென அதிகரிப்பு

சென்னை: ஒரு கிலோ வெங்காயம் ரூ.90க்கு விற்பனை .. தமிழக மக்களின் சமையலில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் வரத்து குறைவாக இருக்கிறது.

இந்த மார்க்கெட்டுக்கு பல மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்றவெளி மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இந்த மார்க்கெட் மூலமாக சுற்றுவட்டார கிராம பகுதி சில்லறை, மொத்த வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகம் பொருள்களை வாங்குகின்றனர்.

onion price,traders ,வெங்காயம் விலை,வியாபாரிகள்

அந்த வகையில் கடந்த மாதம் சின்ன வெங்காயம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை இல்லாத காரணத்தால், அதன் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.

அதனால் அதன் விலையானது அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சின்ன வெங்காயம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 90 வரை விற்பனை செய்யப்பட்டது.

Tags :