Advertisement

நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை இன்று உயர்வு

By: vaithegi Thu, 13 July 2023 10:57:01 AM

நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை இன்று உயர்வு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 அதிகரித்து 1 சவரன் 44,296 ரூபாயை தொட்டது .. சென்னையில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும், சரிவதுமாக இருந்தாலும், சவரன் 44ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகி வந்தது.

அந்தவகையில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856-க்கும், கிராமுக்கு ரூ.03 குறைந்து 1 கிராம் ரூ.5,457-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கம் விலை அதிரடியாக ரூ.144 அதிகரித்து , 1 சவரன் 44,000 ரூபாயை தொட்டது. கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,500க்கு விற்கப்பட்டது

the price of gold,comedians ,தங்கம் விலை,நகைப்பிரியர்கள்

இந்தநிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. இதையடுத்து அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 அதிகரித்து , 1சவரன் 44,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோன்று கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து 1கிராம் 5,537 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரே நாளில் 2 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து இருக்கிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 1கிராம் வெள்ளி விலை 2 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 1 கிராம் 79 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கிலோ பார் வெள்ளி ரூ.79,500க்கு விற்கப்படுகிறது.

Tags :