Advertisement

சற்று குறைந்த தங்கம் விலை

By: vaithegi Wed, 25 Jan 2023 5:03:16 PM

சற்று குறைந்த தங்கம் விலை

சென்னை: சவரனுக்கு ரூ.80 குறைவு .... உலக நாடுகள் மத்தியில், அதுவும் குறிப்பாக இந்தியாவில் எப்பொழுதும் தங்க நகைக்கு என்று ஒரு தனி மவுசு இருக்கும். தங்கத்தின் விலை கூடினாலும் கூட இதன் விற்பனை குறைந்தது கிடையாது.இதையடுத்து அதற்கு ஏற்றார் போல நாளுக்கு நாள் தங்கம் விலை புது புது உயரத்தை எட்டி கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக புத்தாண்டின் பின்னர் தங்கம் தங்கம் விலை பெரும்பாலும் குறையவே இல்லை. ஆனால் இன்று (25.01.2023) தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது .

gold,jewelry ,தங்கம் ,நகை

எனவே அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,345-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.42,760-க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளியின் விலை, எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|