Advertisement

இன்று ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு ரூபாய் அதிகரிப்பு

By: vaithegi Fri, 30 Dec 2022 2:43:20 PM

இன்று ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு ரூபாய் அதிகரிப்பு

சென்னை: சமீப காலமாகவே தங்கம் விலை உச்சத்தை தொட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பங்கு சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து கொண்டு வருகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாகவே இந்த தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களின் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

chennai,jewelry lovers,gold ,சென்னை,நகை பிரியர்கள் ,தங்கம்

இதையடுத்து இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, 5,115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே சமயம் சவரனுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்து 40,920 ரூபாயாக தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,517 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல வெள்ளியின் கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, 72.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 72,500 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :