Advertisement

சோனி நிறுவனத்தின் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

By: Monisha Sat, 26 Sept 2020 6:59:55 PM

சோனி நிறுவனத்தின் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

இந்திய சந்தையில் சோனி நிறுவனத்தின் WF-H800 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் சோனியின் டிரை-ஹோல்டு ஸ்டிரக்சர், சோனி டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின், நீண்ட பேட்டரி லைஃப், ஆட்டோமேடிக் பிளே/பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டிருக்கிறது.

புதிய இயர்பட்ஸ் 6 எம்எம் டோம்-டைப் டிரைவர்களை கொண்டு இயங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5 மற்றும் புதிய ப்ளூடூத் சிப் கொண்டுள்ளது. இவை சீரான ஆடியோ அனுபவத்தை குறைந்த லேடென்சியில் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

indian market,sony company,truly wireless,earbuds ,இந்திய சந்தை,சோனி நிறுவனம்,ட்ரூலி வயர்லெஸ்,இயர்பட்ஸ்

மேலும் இதில் குவிக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 70 நிமிடங்களுக்கு பயன்படுத்த முடியும். இதில் இயர் டிடெக்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இயர்போனை அணிந்து கொண்டால் தானாக ஆன் ஆகும். பின் காதில் இருந்து கழற்றினால் தானாக ஆப் ஆகிவிடும்.

இத்துடன் சோனி WF-H800 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், அலெக்சா மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகளை கொண்டுள்ளது. இது பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags :