Advertisement

இந்தியாவில் சோனியின் புதிய கேமிங் பிஎஸ்5 கன்சோல் அறிமுகம்

By: Monisha Sat, 19 Dec 2020 12:41:56 PM

இந்தியாவில் சோனியின் புதிய கேமிங் பிஎஸ்5 கன்சோல் அறிமுகம்

சோனி நிறுவனம் அறிமுகம் செய்த புதிய தலைமுறை கேமிங் கன்சோல் பிஎஸ்5 உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விற்பனை துவங்கிய பல நாடுகளில் புதிய பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் இதன் இந்திய விற்பனை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சோனி நிறுவனம் பிஎஸ்5 கன்சோலை ஜனவரி மாத மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரும் என கூறப்படுகிறது. புதிய பிஎஸ்5 கன்சோலுக்கான முன்பதிவு இம்மாத இறுதியில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

sony company,gaming ps5,console,indian market,playstation ,சோனி நிறுவனம்,கேமிங் பிஎஸ்5,கன்சோல்,இந்திய சந்தை,பிளே ஸ்டேஷன்

மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் புதிய பிஎஸ்5 கன்சோல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் சோனி சென்ட்டர்களும், பிஎஸ்5 முன்பதிவு இம்மாத இறுதியில் துவங்கலாம் என தெரிவித்து உள்ளது.

முதற்கட்டமாக பிஎஸ்5 கன்சோல் நாட்டின் முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. பிஎஸ்5 டிஜிட்டல் எடிஷன் விற்பனை துவங்க மேலும் சில காலம் ஆகும் என கூறப்படுகிறது. பிஎஸ்5 விற்பனை ஏற்கனவே துவங்கிய இருக்கும் பல்வேறு சந்தைகளிலும் கன்சோலுக்கு பெரும் தட்டுப்பாடு சூழலே நிலவுகிறது.

Tags :