Advertisement

இன்றைய வர்த்தக நாளில் பங்குச்சந்தை சரிவு

By: vaithegi Wed, 16 Aug 2023 11:18:08 AM

இன்றைய வர்த்தக நாளில் பங்குச்சந்தை சரிவு

மும்பை : இன்றைய வர்த்தக நாளில் 65,238 புள்ளிகள் என்று சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 73.22 புள்ளிகள் சரிந்து 65,328.70 புள்ளிகளாக வர்த்தகமாகி கொண்டு வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 42.20 புள்ளிகள் சரிந்து 19,392.35 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

இதையடுத்து முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,401 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,434 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

stock market,trading day ,பங்குச்சந்தை , வர்த்தக நாள்

இதன் இடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து கொண்டு வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து உள்ளனர்.

மேலும் பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள இந்த மாறுதலால் இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ லிமிடெட், ஐடிசி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இண்டஸ்இண்ட் வங்கி, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Tags :