Advertisement

பங்குச்சந்தை இன்று உயர்வு

By: vaithegi Thu, 23 Feb 2023 2:49:17 PM

பங்குச்சந்தை இன்று உயர்வு

இந்தியா; இன்றைய வர்த்தக நாளில் 59,777 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 149 புள்ளிகள் அல்லது 0.25% என உயர்ந்து 59,862 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 40.10 புள்ளிகள் அல்லது 0.23% உயர்ந்து 17,594 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாளில் தொடர் சரிவை சந்தித்த பங்குச்சந்தை முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 927 புள்ளிகள் அல்லது 1.53% குறைந்து 59,744 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,554 ஆகவும் நிறைவடைந்தது.

இதையடுத்து சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : ஐடிசி லிமிடெட், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, என்டிபிசி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

stock market,sensex ,பங்குச்சந்தை ,சென்செக்ஸ்

அதைத்தொடர்ந்து ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் கம்பெனி, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

இதனை அடுத்து நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : யுபிஎல் லிமிடெட், ஐடிசி லிமிடெட், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

மேலும் ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, திவிஸ் லேபரட்டரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Tags :