Advertisement

பங்கு வர்த்தகம் இன்று லாப நோக்கத்துடன் காணப்படுகிறது

By: vaithegi Wed, 01 Feb 2023 2:07:00 PM

பங்கு வர்த்தகம் இன்று லாப நோக்கத்துடன் காணப்படுகிறது

மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் வரை அதிகரித்து 60,007 புள்ளிகளாக இருந்தது. இதில், வங்கி துறையானது லாபத்துடன் தொடங்கியது.

எனவே இதன்படி, எஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்றவற்றின் பங்குகள் லாபத்துடன் தொடங்கின. எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் கோடக் வங்கி போன்றவையும் பங்கு வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் கூடுலான லாபத்துடன் காணப்பட்டன.

stock trading,mumbai stock exchange , பங்கு வர்த்தகம்,மும்பை பங்கு சந்தை

இதையடுத்து கோல் இந்தியா, பவர் கிரிக் கார்ப்பரேசன் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவையும் லாபத்துடன் காணப்பட்டன. இருப்பினும், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

இதேபோல தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 130 புள்ளிகள் வரை அதிகரித்து 17,792 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்து ரூ.81.77 ஆக உள்ளது. இது நேற்று ரூ.81.92 என முடிவடைந்த மதிப்புடன் ஒப்பிடும்போது 0.18% அதிகம் ஆகும்.

Tags :