Advertisement

2-வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றம்

By: vaithegi Tue, 31 Jan 2023 7:48:06 PM

2-வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றம்

இந்தியா: பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் ..... இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. எனினும் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை சரிவு, மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் ஆகிய காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது.

இதையடுத்து அதேவேளையில், டி.சி.எஸ். மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,437 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. 1,063 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.125 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

stock markets,stock ,பங்குச் சந்தைகள்,பங்கு

அதைத்தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.270.33 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.73 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மேலும் இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 49.49 புள்ளிகள் அதிகரித்தது59,549.90 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 13.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,662.15 புள்ளிகளில் முடிவுற்றது.

Tags :