Advertisement

திடீரென உயர்ந்த தங்கம் விலை

By: vaithegi Sat, 18 Feb 2023 1:19:37 PM

திடீரென உயர்ந்த தங்கம் விலை

சென்னை: ஒருவார சரிவுக்கு பின் மீண்டும் இன்று உயர்வு ... சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து 5,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று ஆபரண தங்கம் சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் வரை குறைந்து 42,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து 71.20 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 71,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold,sawaran ,தங்கம் ,சவரன்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.42,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.5,290க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் அதிகரித்து ரூ.71.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|