Advertisement

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் விரைவில் அறிமுகம்

By: Monisha Mon, 28 Dec 2020 1:28:12 PM

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் விரைவில் அறிமுகம்

இந்திய சந்தையில் 13 ஜனவரி, 2021, தேதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வு பற்றி டாடா மோட்டார்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இவ்விழாவில் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட அல்ட்ரோஸ் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் டாடா அல்ட்ரோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

அந்த வகையில் விரைவில் இரண்டு வகை என்ஜின்களை டாடா மோட்டார்ஸ் இந்த மாடலில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினாக இருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 110 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

tata motors,variant,petrol,motor,engine ,டாடா மோட்டார்ஸ்,வேரியண்ட்,பெட்ரோல்,மோட்டார்,என்ஜின்

இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் டிசிடி யூனிட் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய டர்போ என்ஜின் உயர் ரக மாடல்களில் மட்டுமே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடல் புதிய ஹூண்டாய் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் போக்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய மாடல் மரினா புளூ நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது.

Tags :
|
|