Advertisement

இந்தியாவில் டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By: Monisha Mon, 12 Oct 2020 6:34:12 PM

இந்தியாவில் டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, குவாட் கேமரா சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 16 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேமரா சென்சார்களுடன் பல்வேறு ஆப்ஷன்களில் புகைப்படங்களை அழகாக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போன் கிளவுட் வைட் மற்றும் பியூரிஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்குகிறது.

transition holdings,india,techno camon,smartphone ,டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ்,இந்தியா,டெக்னோ கேமான்,ஸ்மார்ட்போன்

டெக்னோ கேமான் 16 சிறப்பம்சங்கள்
- 6.8 இன்ச் 1640x720 பிக்சல் HD+ 20.5:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
- ஏஆர்எம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஹைஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 64 எம்பி, f/1.79 பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- ஏஐ லென்ஸ்
- 16 எம்பி செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

Tags :
|