Advertisement

பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் டெக்னோ மொபைல் நிறுவனம்!

By: Monisha Mon, 15 June 2020 6:26:09 PM

பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் டெக்னோ மொபைல் நிறுவனம்!

இந்தியாவில் டெக்னோ மொபைல் நிறுவனம் ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனினை ஜூன் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக டெக்னோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வெளியான தகவலின் படி புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி, நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது.

techno mobile,spark power 2,fingerprint sensor,6000mah battery ,டெக்னோ மொபைல் நிறுவனம்,ஸ்பார்க் பவர் 2,கைரேகை சென்சார்,6000 எம்ஏஹெச் பேட்டரி

இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்குகிறது. மேலும் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்தால் நான்கு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என டெக்னோ தெரிவித்துள்ளது.

இதுதவிர புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Tags :