Advertisement

80 ஆயிரம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா நிறுவனம்

By: Nagaraj Fri, 25 Nov 2022 6:59:00 PM

80 ஆயிரம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா நிறுவனம்

நியூயார்க்: 80 ஆயிரம் கார்களை திரும்ப பெறுகிறது டெஸ்லா நிறுவனம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்ட 80,000 கார்களை திரும்பப் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் தயாரித்து வெளியிடப்பட்ட கார்களையும் திரும்பப் பெறுகிறது.
பாதிக்கப்பட்ட கார்களில் மென்பொருள் மற்றும் சீட் பெல்ட் சிக்கல்களை டெஸ்லா கண்டுபிடித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனமான டெஸ்லா 2013 முதல் 2020 வரை சீனாவுக்கு ஏற்றுமதி செய்த 67,698 எஸ் மற்றும் எக்ஸ் மாடல்களை திரும்பப் பெற்றுள்ளது.

china,elon musk,tesla cars,returns,cars ,எலான் மஸ்க், சீனா, டெஸ்லா நிறுவனம், திரும்ப பெறுகிறது, கார்கள்

மேலும் கூறப்பட்ட கார்களில் புதிய மென்பொருள் அப்டேட் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி மற்றும் நவம்பர் 2019 க்கு இடையில் ஏற்றுமதி செய்யப்பட்ட 2,736 மாடல் 3 டெஸ்லா கார்களையும் திரும்பப் பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதத்தில், டெஸ்லா சீனாவில் இருந்து மொத்தம் 127,785 கார்களை திரும்பப் பெற்றது, இது ஒரு பெரிய குறைபாடு காரணமாக விபத்துகளை ஏற்படுத்தியது.

Tags :
|