Advertisement

சர்வதேச சந்தையில் அதிகளவு விற்பனையாகும் போக்கோ ஸ்மார்ட்போன்கள்!

By: Monisha Sat, 28 Nov 2020 08:33:51 AM

சர்வதேச சந்தையில் அதிகளவு விற்பனையாகும் போக்கோ ஸ்மார்ட்போன்கள்!

போக்கோ பிராண்டு சியோமியின் துணை பிராண்டாக அறிமுகமானது. பின்னர் ஜனவரி மாத வாக்கில் போக்கோ பிராண்டு இனி தனி பிராண்டாக செயல்படும் என அறிவித்தது. இந்நிலையில் போக்கோ முற்றிலும் தனி பிராண்டு என்பதை மீண்டும் அறிவித்து இருக்கிறது.

2018 ஆம் ஆண்டு போக்கோ எப்1 மாடலுடன் போக்கோ பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் விற்பனையில் சுமார் 22 லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி அசத்தியது. பிளாக்ஷிப் அம்சங்கள் நிறைந்த போக்கோ எப்1 மாடலை தொடர்ந்து போக்கோ பிராண்டு மிட் ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

international market,sales,poco,smartphone,blockship ,சர்வதேச சந்தை,விற்பனை,போக்கோ,ஸ்மார்ட்போன்,பிளாக்ஷிப்

இந்நிலையில் போக்கோ பிராண்டின் மொத்த ஸ்மார்ட்போன்கள் விற்பனை சர்வதேச சந்தையை உள்ளடக்கி சுமார் 60 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்து இருப்பதாக போக்கோ அறிவித்து உள்ளது. உலகம் முழுக்க 35 சந்தைகளில் போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

சர்வதேச சந்தையில் போக்கோ பிராண்டிங்கில் போக்கோ எப்1, எப்2 ப்ரோ, போக்கோ எக்ஸ்3, போக்கோ எம்3 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. போக்கோ பிராண்டின் சமீபத்திய ஸ்மார்ட்போன் போக்கோ எம்3 ஆகும். இது போக்கோ எம்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

Tags :
|
|