Advertisement

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு ... சாமானியர்கள் மத்தியில் அதிர்ச்சி

By: vaithegi Sat, 12 Nov 2022 3:07:22 PM

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு   ...   சாமானியர்கள் மத்தியில் அதிர்ச்சி

சென்னை: இந்தியாவில் தற்போது பொருளாதார சரிவு மற்றும் பணவீக்கம் அத்துடன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் பெர்ம் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே இதன் எதிரொலியாக தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை மக்கள் அதிக அளவு தங்கத்தால் ஆன அணிகலண்களை அணிகின்றனர். அதனால் தங்கத்தின் தேவையும், பயன்பாடும் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து இந்த நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

gold price,common man ,தங்கத்தின் விலை,சாமானியர்கள்

கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை சவரனுக்கு 1000க்கு மேல் உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.

இதனையடுத்து ஒரு சவரன் ரூ.39.240 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.55 உயர்ந்து ரூ. 4,905க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.67.80க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.800 உயர்ந்து, ரூ.67,800க்கு விற்பனையாகி வருகிறது.

Tags :