Advertisement

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது

By: vaithegi Fri, 01 Sept 2023 09:19:49 AM

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 157.50 குறைந்தது ...சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஆகியவற்றின் விலையில் மாற்றம் ஏற்படும்.

cylinder for commercial use,price ,வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்,விலை


அந்த வகையில் கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை 8 ரூபாய் அதிகரித்தது. இதையடுத்து ரூ. 1945-க்கு விற்ற வணிக சிலிண்டர், கடந்த மாதம் 92 ரூபாய் 50 காசுகள் குறைந்து 1,852.50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 157.50 குறைந்து உள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யிலிருந்து ரூ.1,695க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ. 200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் தற்போது குறைந்து உள்ளது.

Tags :