Advertisement

மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரிக்கும் பழக்கம் அவசியம்

By: Karunakaran Wed, 11 Nov 2020 12:51:51 PM

மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரிக்கும் பழக்கம் அவசியம்

நீங்கள் 30 வயதுக்குட்பட்டவராக இருந்தால், எத்தகைய இடர்பாடுகளையும், சவால்களையும், சந்திக்கும் துணிச்சல் இயற்கையாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரித்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும். பின்னாளில் நீங்கள் கச்சிதமாக திட்டமிட்டு செயல்பட இந்த பழக்கம் பெரிதும் துணை நிற்கும். அதுபோல் நீண்ட கால வரி சேமிப்பு திட்டங்களில் இந்த காலகட்டத்திலேயே முதலீடு மேற்கொள்வது சிறந்ததாகும்.

நிலம், வீடு வாங்க வங்கிகளிடம் கடன் உதவிக்கு அணுகும் போது உங்களின் திட்டமிட்ட நிதி நிர்வாகத்திற்கு அவை சான்றாக அமையும். எந்த வகையில் நமது முதலீட்டை பெருக்கலாம் என தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழிமுறைகளை ஆர்வமுடன் அறிந்து கொள்ள முயலுங்கள். ஒவ்வொரு முதலீட்டிலும் ஆதாயம், இடர்பாடு என இரண்டும் கலந்திருக்கும். நீங்கள் செய்துள்ள முதலீட்டின் தன்மை குறித்து முன் எச்சரிக்கையாக ஒரு திட்ட வரையறையை தயார் செய்து கொள்ளுங்கள்.

investment,monthly budget,30 year age,saving ,முதலீடு, மாதாந்திர பட்ஜெட், 30 வயது, சேமிப்பு

30 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய பராமரிப்பு குறித்து அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். இதற்கு சிறு தொகையை முதலீடு செய்து வாருங்கள். மிகப்பெரிய செலவுகளை சமாளிக்க இந்த முதலீடு உங்களுக்கு துணை நிற்கும். ஒரு வீட்டை வாங்குவதற்கு செய்யும் முதலீட்டிற்கும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டு கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்து கொள்ளுங்கள். முதலீட்டிற்கு சற்றும் பொருந்தாத வாடகை வருவாயை விட வேறு இனங்களில் முதலீடு செய்து கூடுதல் வருவாயை பெற வாய்ப்பிருந்தால் அந்த வழியை நாடுங்கள்.

பணவீக்க பாதிப்புளை சமாளிக்க கூடிய வகையில் உங்கள் குழந்தைகளின் கல்வி செலவு இருக்குமாறு பார்த்து கொள்வது திறமையுள்ள நிதி நிர்வாகத்தில் அடங்கி உள்ளது எனலாம். 40 முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் எப்போது ஓய்வு பெறுவது என்று முடிவெடுக்கும் காலம் இது. உங்கள் முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் ஓய்வு காலத்திற்கு போதுமா என்பதை முடிவு செய்து அதற்கேற்ப ஆதாயம் அதிகம் வரும் முதலீட்டை தேர்ந்தெடுங்கள். திடீரென ஏற்படும் செலவுகளை சமாளிக்க வழிவகை செய்யும் முதலீட்டு இனங்களை தேர்ந்தெடுங்கள்.

Tags :