Advertisement

விரைவில் சிலிண்டர் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்

By: vaithegi Wed, 21 June 2023 3:07:18 PM

விரைவில் சிலிண்டர் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்

இந்தியா: நாட்டில் வர்த்தக எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளதால் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை குறைய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாக இருக்கிறது. தற்போது வரை எல்பிஜி எரிவாயுவின் விலை எவவித மாற்றமும் செய்யப்படாமல் அதை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில் எண்ணெய் நிறுவனம் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆன்லைன் மூலமாக கேஸ் சிலிண்டரை புக் செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் போது ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது, ஆன்லைன் மூலமாகவே கேஸ் சிலிண்டர்களை ஆர்டர் செய்யும் போது முன்பதிவிற்கென வாடிக்கையாளர்களிடம் எவ்வித பணமும் வசூல் செய்யப்படுவது இல்லை.

cylinder price,offers ,சிலிண்டர் விலை,சலுகைகள்


மேலும் இது மட்டுமில்லாமல் கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாக சென்று விநியோகஸ்தர்களை பின்தொடர்வது என எந்த வித தொந்தரவும் இது போன்று ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தால் இருக்காது.

இது மட்டுமில்லாமல் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்வதற்கு எவ்வித நேர கட்டுப்பாடும் கிடையாது. எனவே, வாடிக்கையாளர்கள் எந்நேரத்திலும் எங்கு இருந்தாலும் ஆன்லைன் மூலமாக புக் செய்து கொள்ள முடியும். மேலும், ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும்போது கேஷ்பேக் உள்ளிட்ட பல சலுகைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. .

Tags :