Advertisement

புளூ டிக் பெற்ற ட்விட்டர் பயனாளர்களுக்கு மாத கட்டணம் 8 டாலராம்

By: Nagaraj Fri, 04 Nov 2022 11:11:10 AM

புளூ டிக் பெற்ற ட்விட்டர் பயனாளர்களுக்கு மாத கட்டணம் 8 டாலராம்

நியூயார்க்: புளூ டிக் பெற்றுள்ள ட்விட்டர் பயனாளர்களிடம் மாதக் கட்டணமாக 8 டாலர் வசூலிக்கப்படும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது பயனாளர்கள் மத்ரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கடந்த வாரம் வாங்கினார். ட்விட்டரை வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வரும் எலான் மஸ்க், ட்விட்டரின் வணிகத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

announced,elon musk,ads,convenience,more time,priority,twitter news in tamil,tamil news,tamil business news,business news in tamil,tamil latest updates ,அறிவித்தார், எலான் மஸ்க், விளம்பரங்கள், வசதி, அதிக நேரம், முன்னுரிமை

கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள் மற்றும் தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும்.


அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் வழங்கப்படும் எனவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Tags :
|