Advertisement

புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது!

By: Monisha Sat, 11 July 2020 5:53:09 PM

புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது!

இந்தியாவில் ரியல்மி பிராண்டு புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போனினை ஜூலை 14 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. தற்சமயம் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ப்ளிப்கார்ட் வலைதளத்தில் டீசரின் படி ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் புகைப்படம் மற்றும் ரியல்மி 6ஐ ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் சக்திவாய்ந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 6எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Tags :