Advertisement

ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 15 ஆம் தேதி முதல் விற்பனை

By: Monisha Sat, 13 June 2020 6:39:19 PM

ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 15 ஆம் தேதி முதல் விற்பனை

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக குறுகிய எண்ணிக்கையை விற்பனை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் கணிசமான அளவு ஒன்பிளஸ் 8 சீரிஸ் 5ஜி மாடல்களை சீரான எண்ணிக்கையில் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கிவிட்டது. இதனால் ஒன்பிளஸ் 8 சீரிஸ் 5ஜி மாடல்கள் விரைவில் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

oneplus 8 pro,5g,smartphone,on june 15th,sale ,ஒன்பிளஸ் 8 ப்ரோ,5ஜி,ஸ்மார்ட்போன்,ஜூன் 15 ஆம் தேதி,விற்பனை

ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை விவரம்:
ஒன்பிளஸ் 8 கிளேசியல் கிரீன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 41,999

ஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 44,999

ஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன், இன்டர்ஸ்டெல்லார் குளோ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 54,999

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன் மற்றும் அல்ட்ராமரைன் புளூ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 59,999

Tags :
|