Advertisement

உயர்ந்தது முட்டை விலை

By: vaithegi Mon, 06 Nov 2023 3:51:20 PM

உயர்ந்தது முட்டை விலை


சென்னை: பண்டிகை காலங்களில் அனைத்து வித அத்தியாசிய பொருட்களின் விலையும் வழக்கத்தை விட அதிகரித்து கொண்டே வருகிறது. வருகிற நவம்பர் 12ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் என் இ சி சி முட்டை விலையை அதிகரித்து உள்ளது.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக 525 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை, நேற்று மேலும் 5 காசுகள் உயர்ந்துள்ளது. எனவே இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை 530 காசுகளாக உள்ளது.

eggs,sale ,முட்டை ,விற்பனை


சில்லறை விற்பனைக்கு வரும்போது இதைவிட 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை விலை உயர்வு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தீபாவளி பண்டிகை காரணமாக முட்டை விற்பனை அதிகரித்து வருவதால் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|