Advertisement

அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து அதிகர்ப்பு

By: vaithegi Mon, 11 Sept 2023 4:30:34 PM

அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து அதிகர்ப்பு

சென்னை: அத்தியாவசிய பொருள்கள் விலை தொடர்ந்து ஏற்றம் பெற்று வரும் நிலையில், விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை பட்டியல் குறித்து அறிவிப்பு வெளியீடு ...தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை குறித்து வாரம் வாரம் அறிவிப்பு வெளியாகும். இந்த வாரம் வெளியான அறிவிப்பில் நல்லெண்ணெய் விலை அதிரடியாக அதிகரித்து உள்ளது. இதையடுத்து அதன் படி கடந்த வாரம் 15 கிலோ நல்லெண்ணெய் ரூ. 6765க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் திடீரென ரூ. 660 உயர்ந்து ரூ.7425க்கு விற்கப்படுகிறது.

essential material,price ,அத்தியாவசிய பொருள்,விலை

அதே போன்று கடலை எண்ணெய் விலை கடந்த வாரம் 15 கிலோ ரூ.3100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் குறைந்து ஒரு டின் ரூ.3050க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் துவரம் பருப்பு 100 கிலோ நயம் புதுஸ் லையன் வகை கடந்த வாரம் ரூ.15,500 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.1000 அதிகரித்து ரூ.16,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாசி பருப்பு ஒரு மூட்டைக்கு ரூ. 500 அதிகரித்து ரூ.11,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்டாணி பருப்பு கடந்த வாரத்தை விட ரூ.100 அதிகரித்து ரூ. 6400க்கு விற்பனை செய்யப்படுகிறது உளுந்து விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.700 அதிகரித்து ரூ.10,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாசி பயறு விலை இந்த வாரம் ரூ.1000 அதிகரித்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :