Advertisement

எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது

By: vaithegi Sun, 03 Sept 2023 3:06:56 PM

எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது


சென்னை: இந்தியாவில் கடந்த 2 வருடங்களாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து. இந்த இரண்டும் அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில் பொதுமக்கள் இதை வாங்குவதற்கு பெரும் தொகையை செலவிட வேண்டிய நிலை இருந்தது.

பெருந்தொற்று, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு இவற்றிற்கு மத்தியில் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் வாங்குவதில் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

gas cylinder price,petrol,diesel ,எரிவாயு சிலிண்டரின் விலை, பெட்ரோல், டீசல்

அதனால் இதன் விலையை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து இது குறித்து ஆலோசிக்கப்பட்டு தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று ரூ.158 குறைக்கப்பட்டு தற்போது சிலிண்டரின் விலை ரூ.1,695 – விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டு ரூ. 918-க்கு க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டரை பெற்று உள்ள வாடிக்கையாளர்களுக்கு விலை ரூ. 400 வரை குறையும் என கூறப்படுகிறது.

Tags :
|