Advertisement

தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது

By: vaithegi Wed, 16 Aug 2023 1:49:53 PM

தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது

சென்னை: இன்று 24 கேரட் தங்கம் கிராம் ரூ. 5495க்கு விற்பனை ..தமிழகத்தில் தங்கம் விலையானது இந்த மாதம் முதல் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ள நிலையில் இன்று (ஆக. 16) தங்கம் விலை குறைந்து உள்ளது.

இதையடுத்து இன்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.5495க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று 1 சவரன் தங்கம் ரூ.43960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price,chennai , தங்கம் விலை,சென்னை


மேலும் 24 கேரட் தங்கம் விலை 1 கிராம் ரூ. 5965 க்கும் 1 சவரன் ரூ. 47720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளி விலை சற்று உயர்ந்து 1 கிராம் ரூ.76.20க்கும் ஒரு கிலோ ரூ. 76200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர். நகையை வெறும் ஆபரணமாக பார்க்காமல், முதலீட்டாக நினைப்பவர்களுக்கு இது நல்ல காலம் தான்.

Tags :