Advertisement

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது

By: vaithegi Wed, 23 Aug 2023 2:38:03 PM

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது

சென்னை: கிராம் ரூ.5466க்கு விற்பனை ... தமிழகத்தில் தங்கம் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதை மக்கள் வாங்க தயங்குவதில்லை. அதாவது இனி வரும் காலங்களில் தங்கம் விலை எதிர்பாராத பெரும் உச்சத்தை தொட இருக்கிறது.

அதனால் இப்போதே மக்கள் தங்கத்தை வாங்க நினைக்கின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 23) தங்கம் கிராம் ரூ.6 அதிகரித்து ரூ. 5466க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price,sale ,தங்கம் விலை,விற்பனை

அதே போன்று 1 சவரன் தங்கம் ரூ. 48 அதிகரித்து ரூ. 43728க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 காரட் சுத்தமான தங்கம் ரூ. 5936க்கும் 1 சவரன் தங்கம் ரூ. 47488க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 78.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :