Advertisement

வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்தது

By: vaithegi Sat, 09 Sept 2023 2:59:09 PM

வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்தது

சென்னை : செப்டம்பர் மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது.நேற்று சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் பங்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து உச்சத்தில் இருந்து கொண்டு வருகிறது.

gold price,sale ,தங்கத்தின் விலை ,விற்பனை

இதையடுத்து அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6000 க்கும், சவரனுக்கு ரூ. 48,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5530 க்கும், சவரனுக்கு ரூ.44,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது. அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.5980 க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.47,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.5510 க்கும் சவரனுக்கும், ரு. 160 குறைந்து ரூ.44,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை த் தொடர்ந்து, நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 50 காசுகள் குறைந்து ரூ.77 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :