Advertisement

தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளது

By: vaithegi Wed, 01 Nov 2023 3:01:56 PM

தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளது


சென்னை: உள்நாட்டில் தங்கத்தின் ஏற்றுமதி, இறக்குமதி போன்ற வற்றை பொருத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாகவே திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகிய முக்கிய தினங்களில் தங்கத்தின் விலை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு அதிரடியாய் தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டது.

இதன் பின், கடந்த 2 நாட்களாக மீண்டும் குறைய துவங்கி உள்ளது. எனவே அதன்படி, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6185க்கும், சவரனுக்கு ரூ.49,480 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5715 க்கும், சவரனுக்கு 45,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold price,sale , தங்கத்தின் விலை,விற்பனை

இதனை அடுத்து நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்திருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 29 குறைந்து ரூ.6156க்கும், சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.49,248க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 22 ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5686க்கும், சவரனுக்கு ரூ. 232 குறைந்து ரூ.45,488 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 78.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.1.20 குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :