Advertisement

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்றும் குறைவு

By: vaithegi Tue, 11 July 2023 11:47:39 AM

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்றும் குறைவு

சென்னை: இந்தியாவில் பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை பொறுத்து தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூன் மாத இறுதியில் இருந்து தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைய ஆரம்பித்து இருக்கிறது.

அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து 5944 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து 47452 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold price,stock market , தங்கத்தின் விலை ,பங்குச் சந்தை

இந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கத்தின் விலை சற்று குறைந்து இருக்கிறது. அதாவது, சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 5941 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ. 24 குறைந்து 47 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 76.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 30 காசுகள் உயர்ந்து 77.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கி உள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags :