Advertisement

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் குறைவு

By: vaithegi Thu, 03 Aug 2023 11:30:07 AM

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் குறைவு

சென்னை: இன்று அதிரடியாய் ஒரே நாளில் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி ... உள்நாட்டில் பங்குச்சந்தையின் நிலவரம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொருத்து தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை மாத இறுதியிலிருந்தே ஓரளவுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 6017 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 48,136 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold price,sale ,தங்கத்தின் விலை,விற்பனை

இந்த நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது சென்னையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்து இருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 12 குறைந்து 6005 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 94 குறைந்து 48,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போன்று சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 80.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 1.80 காசுகள் குறைந்து 78.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :