Advertisement

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றம்

By: vaithegi Tue, 13 June 2023 12:48:52 PM

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றம்

சென்னை: இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர துவங்கியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி .... இந்தியாவில் பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்ற சரிவினை பொறுத்துதான் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்ததால் அதிகளவிலான நகை பிரியர்கள் நகை வாங்குவதில் மிகவும் ஆர்வம் செலுத்தி வந்தனர்.

அதாவது, சென்னையில் நேற்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 6048 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து 48,392 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold price,chennai ,தங்கத்தின் விலை , சென்னை

இதையடுத்து நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது. அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 6058 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து 48,464 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.79.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 10 காசுகள் குறைந்து ரூ.79.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags :