Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்வு

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்வு

By: vaithegi Wed, 10 May 2023 11:59:54 AM

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்வு

சென்னை: தற்போது மீண்டும் சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி .... தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக தங்கத்தின் விலை 37 ஆயிரம் ஆக இருந்தது.

ஆனால் கடந்த வாரம் தங்கத்தின் விலை 46 ஆயிரம் ஆக உயர்ந்தது. இந்த அதிரடி விலை உயர்வு என்பது சாமானியர்கள் மத்தியில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியது எனலாம். தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் கடந்த 6ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 83 ரூபாய் குறைந்து 5,692 ரூபாய்க்கு விற்பனையானது.

gold price,common man ,தங்கத்தின் விலை,சாமானியர்கள்

அன்றைய தினம் சவரன் 664 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 536 ஆக இருந்தது. கடந்த 8ம் தேதி விலை நிலவரப்படி 18 ரூபாய் கிராமுக்கு அதிகரித்து 5,710 ரூபாய் ஆகவும் , சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 680 ஆகும் விற்பனையானது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.45,936-க்கு விற்பனையாகிறது. 1 கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 25 அதிகரித்து ரூபாய் 5742 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags :