Advertisement

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும்

By: vaithegi Wed, 04 Oct 2023 11:37:49 AM

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும்

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த மே 5-ம் தேதி பவுன் தங்கம் ரூ.46,200 எனும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இதற்கிடையே, செப்.25-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று ரூ.528 குறைந்து பவுன் ரூ.42,320-க்கு விற்பனையானது. அந்த வகையில் இன்று (அக்.4) தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5285க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 42280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price,sale ,தங்கத்தின் விலை,விற்பனை

அதே போன்று 24 காரட் சுத்தமான தங்கம் விலை இரு கிராம் ரூ. 5755க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 46040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ. 73.10க்கும், ஒரு கிலோ தங்கம் ரூ. 73100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் வெள்ளி விலை குறைவால் இது தங்கம் வாங்க சிறந்த நேரமாக இருக்கிறது.

Tags :