Advertisement

தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்று ஒரே நாளில் சட்டென்று குறைந்தது

By: vaithegi Tue, 05 Sept 2023 3:04:39 PM

தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்று ஒரே நாளில் சட்டென்று குறைந்தது

சென்னை: சவரனுக்கு ரூ.44,360 க்கும் விற்பனை ....தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதுமே ஓணம் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலையில் பெரிதளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முகூர்த்த தினத்தை முன்னிட்டு திடீரென தங்கத்தின் விலை அதிகரித்தது.

அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6,030க்கும், சவரனுக்கு ரூ. 48,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5,560க்கும், சவரனுக்கு ரூ. 44, 480க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

gold price,sale , தங்கத்தின் விலை ,விற்பனை

இதையடுத்து 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.6,015க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 48,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5545க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.44,360 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.1 குறைந்து ரூ.79 க்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது. இதனை அடுத்து மீண்டும் தங்கத்தின் விலை குறைய துவங்கியதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Tags :