Advertisement

தங்கத்தின் விலை நேற்றை போல இன்றும் குறைவு

By: vaithegi Thu, 18 May 2023 12:01:58 PM

தங்கத்தின் விலை நேற்றை போல இன்றும் குறைவு

சென்னை : மே மாதத்தின் துவக்கத்திலிருந்தே பெரும்பாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த படியே தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்குப் பிறகு நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கத்தின் விலை சற்று குறைந்து இருக்கிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 குறைந்து ரூபாய் 6 ஆயிரத்து 146 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 360 குறைந்த 49,168 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold price,sales,comedians ,தங்கத்தின் விலை ,விற்பனை,நகைப்பிரியர்கள்

இதையடுத்து நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6126 ரூபாய்க்கும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 78.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது பத்து காசுகள் குறைந்து 78.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|