Advertisement

இன்று மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை குறைவு

By: vaithegi Wed, 11 Oct 2023 3:34:03 PM

இன்று மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை குறைவு


சென்னை: தமிழகத்தில் கடந்த மாதங்களில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் நகை பிரியர்களும் திருமணத்திற்கு நகைகள் வாங்குவோரும் அதிக ஆர்வத்துடன் தங்க அணிகலன்களை வாங்கி வந்தனர்.

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை நிலையாக இல்லாமல் தினந்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து கொண்டு வருகிறது.

gold price,jewellery ,தங்கத்தின் விலை,நகைகள்

இதனை அடுத்து நேற்று ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 சவரனுக்கு ரூ. 64 குறைந்து உள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 42, 976-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று 1 கிராம் தங்கம் ரூ.8 குறைந்து ரூ. 5,372 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது தங்கத்தை தொடர்ந்து வெள்ளி 50 காசுகள் குறைந்து கிராம் ரூ.75-க்கும் கிலோ வெள்ளி ரூ. 75,000-க்கும் விற்பனை ஆகி கொண்டு வருகிறது.

Tags :