Advertisement

தங்கம் விலை இன்று திடீர் அதிகரிப்பு

By: vaithegi Thu, 12 Oct 2023 12:27:37 PM

தங்கம் விலை இன்று திடீர் அதிகரிப்பு

இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 1 சவரன் 43,280 ரூபாய்க்கு விற்பனை .. தமிழக பெண்களுக்கு தங்கம் எவ்வளவு விலையில் விற்றாலும் அதன் மீதான மோகம் குறையாது. இந்த நிலையில் நடப்பு மாத தொடக்கத்தில் தங்கம் விலை கிடுகிடுவென குறைந்த நிலையில், இந்த வாரத்தில் விலை அதிகரிக்க தொடங்கியது.

அந்தவகையில் நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 1 சவரன் தங்கம் 43,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து 1 சவரன் ரூ.42,976 ஆகவும், கிராமுக்கு ரூ.8 குறைந்து கிராம் ரூ.5,372 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.75.00 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.75,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold price,silver ,தங்கம் விலை,வெள்ளி

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து 1 சவரன் 43,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து 1 கிராம் ரூ.5, 410 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து தங்கத்தை போன்று வெள்ளி விலையும் அதிகரித்து ள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :