Advertisement

சற்று சரிந்தது ஆபரணத்தங்கத்தின் விலை

By: vaithegi Thu, 20 Apr 2023 12:53:12 PM

சற்று சரிந்தது ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னை: இன்று ஒரு சவரனுக்கு 120 குறைவு .... தமிழகத்தில் தற்போது பண்டிகை காலம் நெருங்கி கோலாகலமாக சென்று கொண்டுள்ளது. இத்தகைய நேரத்தில் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் 45,000 – ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.

இதனால் சாமானிய மக்களும், நகை பிரியர்களும் தங்கத்தை வாங்குவதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து 1 சவரன் ரூ.45,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

jewelery price,chennai ,ஆபரணத்தங்கத்தின் விலை,சென்னை

மேலும் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.5,650 க்கு விற்பனையாகி வருகிறது. இன்று வெள்ளியின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே ஒரு கிராம் 81 ரூபாய்க்கும் 1 கிலோ வெள்ளி ரூ. 81,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து அட்சய திருதியை வரவுள்ள வேளையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :