Advertisement

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தது

By: vaithegi Fri, 28 July 2023 2:47:10 PM

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தது

சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்க்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,400 ரூபாய்க்கு விற்பனை ... சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 அதிகரித்து 44,416க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து கிராமுக்கு ரூ.17 அதிகரித்து 1 கிராம் தங்கம் ரூ.5,552க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல்ன்று நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 224 உயர்ந்து 1 சவரன் 44,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ. 5,580-க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold,chennai ,தங்கம்,சென்னை

இதையடுத்து வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.78.40க்கும், 1கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ. 78,400க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்க்கு 240 ரூபாய் குறைந்து 1 சவரன் 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.2 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.79.50 ஆகவும், 1 கிலோ வெள்ளி 2000 உயர்ந்து ரூ.79,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|