Advertisement

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு

By: vaithegi Thu, 26 Oct 2023 11:07:59 AM

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு

சென்னை : சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 45,400க்கு விற்பனையாகிறது.

மேலும் அத்துடன் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து , ரூ. 5,675க்கும் விற்பனையாகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. கிராம் ஒன்றிற்கு ரூ. 20 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் 5,655க்கும் , 1 சவரன் 45,240க்கும் விற்பனையாகிறது.

jewelery gold price,chennai ,ஆபரண தங்கத்தின் விலை ,சென்னை


இந்த நிலையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700க்கு விற்பனையாகிறது. 1சவரனுக்கு ரூ.360 அதிகரித்து 1 சவரன் ரூ.45,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88 ரூபாய் ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.88,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
.

Tags :