Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது

By: vaithegi Wed, 12 July 2023 11:16:52 AM

ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது

சென்னை: சென்னையில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து கொண்டு வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும், சரிவதுமாக இருந்தாலும், சவரன் 44ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகி வந்தது.

அந்தவகையில் நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856-க்கும், கிராமுக்கு ரூ.03 குறைந்து 1 கிராம் ரூ.5,457-க்கு விற்பனை செய்யப்பட்டது.

jewelery gold price,sale , ஆபரணத் தங்கத்தின் விலை,விற்பனை

ஆனால் அதேநேரம் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை 30 காசுகள் அதிகரித்து 77.10-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.77,100ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. இதனை அடுத்து அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்து, 1 சவரன் 44,000 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 1 கிராம் ரூ.5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :