Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரிப்பு

By: vaithegi Wed, 19 July 2023 12:06:56 PM

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 1 சவரன் ரூ.44,720க்கு விற்பனை .. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடம் இருந்து வருகிறது. இம்மாதம் தொடக்கத்தில் சவரன் ரூ. 43 ஆயிரத்திலிருந்து ரூ.44 ஆயிரத்திற்கு உள்ளாகவே விற்பனையானது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கம் விலை அதிரடி ஏற்றங்களை சந்தித்து சவரன் ரூ.45,000-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாக சவரனுக்கு ரூ.112 வீதம் அதிகரித்து 1 சவரன் ரூ. 44,288-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,536-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று வெள்ளியும் 81 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையானது.

gold price,chennai , தங்கம் விலை,சென்னை

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, 1 சவரன் ரூ.44,720க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 1கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 5,590க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இன்றைய தினம் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 1 கிராம் ரூ. 82க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி 82,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Tags :