Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பு

By: vaithegi Tue, 19 Sept 2023 12:20:53 PM

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ....சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் இருந்து கொண்டு வருகிறது.

தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது

jewelery gold price,sale ,ஆபரணத் தங்கத்தின் விலை ,விற்பனை


இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,550 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,400-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,160-க்கு விற்பனையாகிறது.இதனை அடுத்து வெள்ளி விலை 0.30காசுகள் அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.78.30-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,300 ஆக இருக்கிறது.

Tags :