Advertisement

ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

By: vaithegi Tue, 03 Jan 2023 2:48:56 PM

ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

சென்னை: ஆபரணத் தங்கம் என்பது தமிழக மக்களை பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அனைத்து வித சுப காரியங்களிலும் தங்கம் தவறாமல் இடம் பெறுவது வழக்கம். இதனால் எவ்வித விலை ஏற்றம் என்றாலும், சுப காரியங்கள் நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் தங்கத்தை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால் அன்றாட தங்கத்தின் விலை நிலவரத்தை மக்கள் கவனித்து கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், கடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.5000 ஐ தாண்டி உள்ளது. இந்த விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

jewelery gold price ,ஆபரணத் தங்கம் ,விலை

ஜனவரி 2ம் தேதியான நேற்றை விட 1 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.41 அதிகரித்து ரூ.5191 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, 1 சவரன் ரூ.328 அதிகரித்து , ரூ.41528 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5593 க்கும், 1 சவரன் ரூ. 44744 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை நேற்று 1 கிராம் ரூ.74.50 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1 அதிகரித்து ரூ.75.50 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.75500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :